Sunday, 24 February 2013

ஆண்ட்ராய்ட் என்றால் என்ன?




ஆன்ட்ராய்ட் என்பது மொபைல் (Smartphone) மற்றும் டேப்லேட் கணினிகளுக்கான (Tablet PC) இயங்குதளமாகும். இது லினக்ஸ் கெர்நெல் (Linux Kernel) என்னும் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இதில் சில மாற்றங்களை செய்து வெளியிட்டது கூகுள்.

☀ஆன்ட்ராய்ட் பதிப்புகள் (Android Versions):☀

ஆன்ட்ராய்ட் இயங்குதளம் தொடர்ந்து மேம்படுத்தப்படும். ஒவ்வொரு தடவை மேம்படுத்தப்படும் போதும் பழைய பதிப்பில் உள்ள பிழைகள் களையப்பட்டு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படும். ஒவ்வொரு பதிப்பிற்கும் இனிப்புவகை உணவுகளின் பெயர்களை வைத்துள்ளது கூகுள். இதன் சமீபத்திய பதிப்பு Jellybean (V4.1) ஆகும்.

ஆன்ட்ராய்ட் புதிய பதிப்பு வந்தவுடனேயே நீங்கள் அதனை பெற முடியாது. நீங்கள் வைத்திருக்கும் மொபைல் மாடலுக்கு உங்கள் மொபைல் நிறுவனம் அந்த வசதியை கொடுக்கும் போது தான் நீங்கள் பெற முடியும்.

☀ஆன்ட்ராய்ட் சிறப்பம்சங்கள்:☀

1. Customize Home Screen - மொபைலின் முகப்பு பக்கத்தை நம் விருப்பப்படி Widget-களை வைத்துக் கொள்ளலாம்.

2. Threaded SMS - நாம் அனுப்பும் எஸ்எம்எஸ்கள் வழக்கமான தோற்றத்தில் இல்லாமல், Threaded SMS என்ற புதிய தோற்றத்தில் இருக்கும். Chat-ல் இருப்பது போன்று ஒருவருடன் நாம் அனுப்பும்/பெறும் எஸ்எம்எஸ்கள் ஒரே வரிசையில் இருக்கும்.

3. Web Browser - கணினிகளில் பயன்படுத்தும் உலவி போன்றே இதுவும் பயன் தருகிறது. முழுமையான FLASH வசதி இருப்பதால் யூட்யூப் போன்ற வீடியோக்களை பார்க்கலாம். சமீபத்திய பதிப்புகளில் க்ரோம் உலவியின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

4. Google Apps - கிட்டத்தட்ட அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் கூகுள் அப்ளிகேஷன்கள் Default-ஆக நிறுவப்பட்டிருக்கும்.

4. Voice Action - இது கூகுள் அப்ளிகேசன் ஆகும். உங்கள் குரல் மூலமாகவே உங்கள் மொபைலை இயக்கலாம். அதாவது கால் செய்யலாம், எஸ்எம்எஸ் அனுப்பலாம், பாடல் கேட்கலாம். இது ஆங்கில மொழிக்கு மட்டும் தான்.

5. ScreenShot - மொபைல் திரையில் தெரிவதை எளிதாக ஸ்க்ரீன்ஷாட் எடுக்கலாம்.

ஆன்ட்ராய்ட் பயன்பாடு:

ஆன்ட்ராய்ட் மொபைல் (அல்லது டேப்லட்) வாங்கியவுடன் அதனை உங்கள் கூகுள் கணக்குடன் இணைக்க சொல்லும். அப்படி இணைத்தால் தான் Android Application Market உள்பட மேலதிக வசதிகளை பயன்படுத்த முடியும்.

ஆன்ட்ராய்டில் பல வசதிகள் இருந்தாலும் இது அளவில்லாத இணைய இணைப்பு (Unlimited Internet Connection) உள்ளவர்களுக்கு மட்டுமே பயனாகும். ஏனெனில் பல அப்ளிகேசன்கள் இணைய இணைப்பில் தான் வேலை செய்கிறது.

☀Google Play:☀

Google Play என்பது ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை பதிவிரக்குவதற்கான சந்தை ஆகும். இங்கு இலவசமாகவும், பணம் கொடுத்தும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணம் கட்டி வாங்கும் அப்ளிகேசன்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், பதினைந்து நிமிடத்திற்குள் திரும்பக் கொடுத்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

பேஸ்புக் மெயில்களை தடுப்பது எப்படி?

நாம் பேஸ்புக் தளத்தில் இணைந்திருந்தால் Likes, Comments உள்பட பேஸ்புக்கில் நடக்கும் செய்திகளைப் பற்றி நமக்கு மின்னஞ்சல்கள் தொடர்ந்து வரும். இந்த தேவையில்லாத மெயில்களை தடுப்பது பற்றி பார்ப்போம்.



பேஸ்புக்கில் Account Settings => Notifications பகுதிக்கு செல்லுங்கள்.

அங்கு How You Get Notifications என்ற இடத்தின் கீழே Email என்பதை க்ளிக் செய்யுங்கள்.

பிறகு Only notifications about your account, security and privacy என்பதை தேர்வு செய்யுங்கள்.

அவ்வளவு தான். இனி முக்கியமானவற்றை தவிர Notifications பற்றிய மெயில்கள் உங்களுக்கு வராது.

பேஸ்புக்கில் டேக் செய்வதை தடுக்க


பேஸ்புக்கில் பிறர் நம்மை டேக் செய்வதை தடுப்பது எப்படி? என்று கேட்டால் அதற்கு உண்மையான பதில், "தடுக்க முடியாது" என்பது தான். ஆனால் நாம் டேக் செய்யப்பட போட்டோ மற்றும் ஸ்டேட்டஸ் நம் அனுமதி இல்லாமல் நம் டைம்லைனிலோ, நண்பர்களுக்கோ தெரியாமல் செய்ய வைக்கலாம்.

உங்கள் பேஸ்புக் கணக்கில் Account Settings என்ற பகுதிக்கு செல்லுங்கள்.

அங்கே இடதுபுறம் Timeline and Tagging என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அங்கே Who can add things to my timeline? என்ற இடத்தில், இரண்டாவதாக உள்ள Review posts friends tag you in before they appear on your timeline? என்பதை க்ளிக்செய்து, அதில் Enabled என்பதை க்ளிக் செய்யுங்கள். அவ்வளவு தான்!

இனி யாராவது உங்களை டேக் செய்தால் அது பற்றி உங்களுக்கு அறிவிப்பு வரும். அதை க்ளிக் செய்தால் Timeline Review பகுதிக்கு செல்லும்.

அங்கே இரண்டு பட்டன்கள் இருக்கும். Add to Timeline என்பதை க்ளிக் செய்தால் உங்கள் டைம்லைனில் தெரியும். Hide என்பதை க்ளிக் செய்தால் தெரியாது.

இந்த வசதி இருந்தாலும், அந்த போட்டோ அல்லது ஸ்டேட்டஸில் உள்ள உங்கள் டேக் அப்படியே தான் இருக்கும். அதனை நீக்க விரும்பினால்,

மேலே சொன்னது போல Hide செய்தபிறகு, Report/Remove Tag என்று காட்டும். அதனை க்ளிக் செய்யுங்கள்.

பிறகு I want to untag myself என்பதை க்ளிக் செய்து Continue என்பதை க்ளிக் செய்யுங்கள்.

உங்கள் Tag நீக்கப்பட்டுவிடும்.